கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியான துடியலூர் தடாகம் பகுதிகளில் சமீப காலமாக வழிப்பறி கொள்ளை, இருசக்கர வாகனம் திருட்டு, செல்போன் பறிப்பு போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றது ரோட்டில் செல்போன் மற்றும் நகைகளை பறிக்கும்கும்பல் தங்கள் கைவரிசையை அவ்வப்போது காட்டி வந்திருக்கின்றனர். இதையடுத்து கவுண்டம்பாளையம் காவல் நிலைய SP நாகரத்தினம் அவர்களின் உத்தரவின் பேரில் ஆய்வாளர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த போலீசாரை கண்டதும் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் தங்கள் வந்த இருசக்கர வாகனத்தை திருப்பிக் கொண்டு செல்ல முயன்றபோது அவர்களை பிடித்து போலீசார் விசாரித்த போது( 21 வயது) சேர்ந்த அஜித், (24 வயது) யோகேஷ் மற்றும் (22 வயது) சந்தோஷ் ஆகிய மூவரும் வாகனத் திருட்டு செல்போன் பறிப்பு, நகை பறிப்பு போன்ற குற்றங்களில் தெரியவந்ததையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-சாதிக் அலி.