கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு செய்கின்றனர்.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழா, கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்தாண்டு நடைபெறவில்லை.
இந்தாண்டு கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதால், திருவிழா நடைபெறுமா என பக்தர்களிடம் எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில், கடந்த, 15ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன், திருவிழா துவங்கியதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த, 22ம் தேதி கம்பம் போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து, பக்தர்கள் தினமும் மஞ்சள் நீர் எடுத்து வந்து, கம்பத்துக்கு ஊற்றி அம்மனை வழிபடுகின்றனர்.
நேற்று வெள்ளிக்கிழமை என்பதால், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நீண்ட வரிசையில் நின்று, அம்மனை வழிபட்டு, கம்பத்துக்கு வேப்பிலை சாற்றி, மஞ்சள் நீர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர். கொடிமரத்தின் கீழ் உள்ள சுவாமிக்கு மஞ்சள் நீர் ஊற்றி, அதன்பின், கீழ் இருந்து மேலாக கொடி மரத்துக்கு ஊற்றி வழிபட வேண்டுமென, கோவில் அர்ச்சகர்கள், பக்தர்களுக்கு தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.