தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை
நாளை தமிழகம் முழுவதும்
268 மையங்களில் நடைபெற உள்ளது.
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் இதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குகள் எண்ணப்படும்.
வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு மையத்திற்கு வரும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் செல்போன் எடுத்து வருவதற்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-M.சுரேஷ்குமார்.