கோவை மாவட்டம் போத்தனூர் 99 வார்டில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.
இம்முகாமில்
நடந்துமுடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலின் வெற்றி வேட்பாளர் 99 வது வார்டு மாமன்ற உறுப்பினர்
அஸ்லாம் பாஷா கலந்துகொண்டு முகாமினை சிறப்பித்தார்.
இந்த முகாமில் ஜிடி, சித்தன்புரம், ஸ்ரீராம் நகர் பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
மேலும் தமிழக அரசின் சிறப்பான போலியோ சொட்டு மருந்து முகாம் திட்டத்தை மக்களிடத்தில் எடுத்துரைத்தார் மாமன்ற உறுப்பினர்
அஸ்லாம் பாஷா.
அத்துடன் தன்னை மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த மக்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டு சித்தனா புரம் ஸ்ரீராம் நகர் பகுதியில் இருக்கும் குறைகளை கேட்டறிந்த அஸ்லாம் பாஷா கோரிக்கை மனுக்களை பெற்றார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சையது காதர்.ஈசா குறிச்சி.