கோவை மாவட்டம் பொள்ளாச்சி
ஆனைமலை ஆலம் விழுது அமைப்பின் சார்பில் நண்பர்கள் ஒன்றிணைந்து ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தோறும் மரக்கன்றுகள் நடும் விழா தொடர்ந்து நூறு வாரங்களை கடந்து செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
அதே சமயம் நடவு செய்த மரக்கன்றுகளை பராமரிப்பு செய்தும் வருகின்றனர் மேலும் இக்குழுவின் அடுத்த பணியான பள்ளிக்கூடங்கள் தோறும் மரம் வைத்து வளர்க்கும் பணியை தொடங்கியுள்ளனர் மேலும் மரத்தின் நன்மைகள் குறித்து பள்ளிக் குழந்தைகளிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள முடிவு செய்து பள்ளிகள் தோறும் மரம் வளர்க்க வைக்கும் பணியில் துவக்கமான இன்று ஆனைமலை அண்ணாநகர் அரசு துவக்கப்பள்ளியில் பறவைகளுக்கும் குழந்தைகளுக்கும் பயன்படும்படியான நவல் மரம், அத்திமரம் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடவு செய்த மரம் வளர்க்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி பள்ளிக் குழந்தைகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
-M.சுரேஷ்குமார்.