சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள கிருங்காக்கோட்டையில் பத்திரகாளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா, கடந்த மார்ச் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
அதைத்தொடர்ந்து ஒன்பதாம் நாளான இன்று காலை பக்தர்கள் பால்குடம் எடுத்து, தங்களுடைய நேர்த்திக் கடனைச் செலுத்தி வழிபட்டனர்.
முக்குருனி பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்ட அக்னி சட்டி மற்றும் பால்குடங்கள் ஊரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை அடைந்தது.
அதைத்தொடர்ந்து பத்திரகாளி அம்மனுக்கு பக்தர்கள் எடுத்து வந்த பால் குடங்கள் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீப ஆரத்தி உடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது. நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்து வழிபாடு செய்தனர்.
விழா ஏற்பாடுகளை நாடார் உறவின் முறையார்கள் செய்திருந்தனர்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.