கோவை சாய்பாபா காலனியில் பேஜ் 3 சலூனின் இரண்டாவது கிளை இன்று துவங்கப்பட்டுள்ளது!!

இந்திய அளவில் அழகு கலை மற்றும் ஆரேக்கிய தொழில் முன்னணி வகித்து வரும் சி.கே குமரவேல், வீணா குமரவேல் ஆகியோரின் தொலைநோக்கு பார்வையில் உருவானது தான் பேஜ் 3. இருபது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் இந்த அழகு கலை சேவையை அளித்துள்ளது.இந்நிலையில், கோவை சாய்பாபா காலனியில் அவினாசிலிங்கம் கல்லூரி சாலையில், ஜிசிடி அருகில் 4000 சதுரடியில் வட்ட வடிவிலான புதுமையான வகையில் அருமையான உள் அமைப்பில், சொகுசான அனுபவத்தை பெறும் வகையில் பேஜ் 3 சலூனின் இரண்டாவது கிளை
இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த சலூனை முன்னணி பாடகர் சக்திஸ்ரீ கோபாலன், வனிதாமோகன் மற்றும் தனலட்சுமி ஜெயச்சந்திரன் மற்றும், சி. கே. குமரவேல் வீணாகுமராவேல் ஆகியோர் பங்கேற்று துவக்கி வைத்தனர்.இந்த சலூனில் பயிற்சி, சான்றிதழ் பெற்ற மற்றும் நிபுணத்துவம் கொண்ட பணியாளர்கள் சேவையாற்றுகின்றனர். தென்னிந்திய அளவில் பல திரைப்பட தொழில் நிறுனங்களுடன் இணைந்து திரை நட்சத்திரங்களுக்கும் பணியாற்றி வருகிறது. சர்வதேச அளவில் திறனும், அனுபவமும் கொண்ட சண்முககுமார் இந்த சலூன் தொடரின் தலைமை செயல் அதிகாரியாகவும், இயக்குனராகவும் பணியாற்றுகிறார்.
கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் இந்த சலூன்களின் உரிமையாளர்களாக லதா மற்றும் சண்முககுமார் உள்ளனர்.ஒவ்வொருக்கும் தனித்தனியாக பொருட்களை ஒரு முறை பயன்படுத்தும் வகையில் வாடிக்கையாளர் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது. ஐஎஸ்ஓ 9001 மற்றும் 14000 சான்று பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

– சீனி,போத்தனூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp