கோவை -திருச்சி சாலையில் ரெயின்போவில் இருந்து பங்கு சந்தை வரை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.232 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று முடிந்துள்ளது.
இது போல் மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.50 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
“கோவை- திருச்சி ரோடு சுங்கம் பகுதியில் மேம்பாலத்தில் இருந்து இறங்கும் தளம் அமைக்கும் பணிகள் முடிவடைந்து விட்டன. மேம்பாலம் தொடங்கும் கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் அருகே இருபுறமும் சர்வீஸ் சாலைகள் அமைக்கப்படு கிறது. மாநகராட்சி பாதாள சாக்கடை குழாய் சீரமைப்பு பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.
கோவை சுங்கம், ராமநாதபுரம் 80 அடி ரோடு சிக்னல் பகுதிக ளில் அடிக்கடி விபத்துகள் நடைபெற்ற இடங்கள் பிளாக் ஸ்பாட் டுகள் என்று கருதப்பட்டு வந்தன.
எனவே அந்த ரோட்டில் மேம்பாலம் திறக்கப்பட்டால் விபத்துகள் குறையும்.
கவுண்டம்பாளையம் மேம்பாலம் மற்றும் திருச்சி ரோடு மேம் பால பணிகளும் முடிவடைந்து விட்டன. அந்த 2 மேம்பாலங்க ளும் விரைவில் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் திருச்சி ரோடு, மேட்டுப்பாளையம் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் குறையும். வாகனங்கள் எளிதாக குறிப்பிட்ட நேரத்தில் சென்று வர முடியும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
கோவை உக்கடம் மேம்பால பணிகள் மந்த நிலையில் நடை பெற்று வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டுனர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே உக்கடம் மேம்பால பணிகளை விரைவில் முடித்து திறக்க வேண்டும் என்று வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.