சிங்கம்புணரியில் கடந்த வியாழனன்று நடைபெற்ற வாரச்சந்தைக்கு கோவில்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் மனைவி வெள்ளையம்மாள் (வயது35) என்பவர் காய்கறி வாங்குவதற்காக வந்துள்ளார். இவரது பையிலிருந்து
₹.1500 மற்றும் செல்போனை 3 பெண்கள் சேர்ந்து திருடுவதை சந்தைக்கு வந்த பொதுமக்கள் பார்த்துவிட்டனர்.
உடனடியாக அவர்கள் மூவரையும் பிடித்து அங்கு வந்த காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்களை விசாரணை செய்ததில் அவர்கள் மூவரும் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியைச சேர்ந்த லட்சுமி, கிருஷ்ணவேணி மற்றும் மீனா என்பது தெரியவந்தது.
மூவரும் தொழில்முறை திருடர்கள் என்பதும், மூவரின் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த சிங்கம்புணரி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் குகன் மேலும் விசாரணை செய்து வருகிறார். மூவரும் சிங்கம்புணரி நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்டு நிலக்கோட்டை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.