போத்தனூரில் மாமன்ற உறுப்பினர்களின் கலந்தாய்வுக் கூட்டம்..!!
கோவை கிழக்கு மாவட்ட மாமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
கோவை கிழக்கு மாவட்ட மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று 9-03-2022 காலை 10மணி முதல் 1:30 மணி வரை போத்தனூர் சுந்தராபுரம் சத்திர வீதியில் இருக்கும் மாநகராட்சி அலுவலகத்தில் அரசு அதிகாரிகளுடன் நடைபெற்றது.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் 95வது வார்டு கவுன்சிலர் S.A.காதர் 99வது கவுன்சிலர் மு.அஸ்லாம் பாஷா மற்றும் 85,97,98,100,வது வார்டு மாமன்ற உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தமது பகுதியில். இருக்கும் குறைபாடுகள், மக்களின் அடிப்படை பணிகள், மற்றும்தண்ணீர். பிரச்சினைகள் போன்ற முக்கிய பிரச்சினைகளை முன்னெடுத்து விவாதிக்கப்பட்டது பிறகு பல வளர்ச்சி பணிகள் மற்றும் முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டு கூட்டம் நிறைவடைந்தது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-செய்யதுகாதர் குறிச்சி.