கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட
பெரிய போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு
ஆனைமலை வட்டத்துக்கு உட்பட்ட அனைத்து ஆரம்ப சுகாதார நிலைய சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டு மகளிர் தினத்தை கொண்டாடினார்கள்.
அப்பொழுது அவர்களுக்கிடையே தாய் சேய் நல திட்டம் அடிப்படையில் கோலப்போட்டி நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் மருத்துவ அலுவலர்கள் அனைவருக்கும் பரிசு வழங்கி சிறப்பித்தனர். மேலும் கொரோனா நோய் தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அனைத்து சுகாதார பணியாளர்களுக்கும் சான்றிதழ் வழங்கி பாராட்டி கௌரவித்தனர்.
அதே சமயம் பாலின பாகுபாடு இல்லாத சிறந்த சமுதாயத்தை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-M.சுரேஷ்குமார்.