தஞ்சை மாவட்டம் திருநறையூர்- நாச்சியார் கோவில் இயங்கிவரும் அல் அமானத் பைத்துல்மால் கமிட்டியின் சார்பாக *வட்டியில்லா பொருளாதார விழிப்புணர்வு கூட்டம் மற்றும்
இஸ்லாமிய பொருளாதார வினா விடை போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி, உமர் (ரலி) பள்ளிவாசல் வளாகத்தில் அதன் துணை செயலாளர் B.ஒளி முகமது அவர்கள் தலைமையில் நடைபெற்றது, இதில் அல் அமானத் பைத்துல்மால் கமிட்டி நிர்வாகிகள், ஜியாவுதீன், ஹாஜாமைதீன், முஜிபுர் ரகுமான், உமர் ரலி பள்ளிவாசல் நிர்வாகிகள் ஜெகபர் அலி, இலியாஸ்,ரஹ்மத்துல்லாஹ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
மௌலவி. ஹுசைன் மன்பஈ (இஸ்லாமிய அழைப்பாளர்)
பொருளாதார நிலை அன்றும் இன்றும், மௌலவி. முஹம்மது ஃகாலித் உமரி இறையச்சத்தை மேம்படுத்தும் ஜக்காத் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்,
இஸ்லாமிய பொருளாதார வினா விடை போட்டியில் வெற்றி பெற்ற 11 மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது, சாகுல் ஹமீது, இர்ஷாத், ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார், அமீர் சுல்தான் நன்றி கூறி நிறைவு செய்தார்.
-ருசி மைதீன்.