கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி மார்க்கெட் வீதியில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன .இந்த கடைகளை நகராட்சி நிர்வாகம் வாடகைக்கு விட்டுள்ளது. இந்த கடையை வாடகைக்கு எடுத்துள்ள வணிகர்களும் வியாபாரிகளும் கடைக்கு செலுத்த வேண்டிய வாடகை தொகையை பாக்கி வைத்துள்ளதாக தெரிகிறது.
இதனால் கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் திடீர் என்று சீல் வைத்துள்ளனர். முன் அறிவிப்பின்றி சீல் வைத்துள்ளதாக வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்து உள்ளார்கள். இதனால் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
-நிருபர்கள் குழு.