கோவையில் ஸ்டுடியோ 7 பிரைடல் அகாடமி சார்பில் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு (Franchise) விருது வழங்கும் விழா ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
கோவையை தலைமையிடமாக கொண்ட ஸ்டுடியோ 7 பிரைடல் ஸ்டுடியோ கடந்த 2017ம் ஆண்டு துவங்கப்பட்டது. அழகுக்கலையில் தனித்துவமிக்க முறையை கையாண்டு வரும் இந்த நிறுவனம் குறைந்த காலகட்டத்திலேயே அதிக கிளைகளுடன் செயல்பட தொடங்கியுள்ளது.
தற்போது சென்னை, கோவை, திருப்பூர் கன்னியாகுமாரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இந்த நிறுவனம் 54 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.
இதனிடையே குறைவான காலத்திலும் கூட சிறப்ப செயல்பட்ட ஸ்டுடியோ 7 நிறுவன பங்குதாரர்களுக்கு (Franchise) விருது வழங்கும் விழா ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற்றது.
இதுகுறித்து ஸ்டுடியோ 7 ப்ரைடல் ஸ்டுடியோவின் நிறுவனர் ராஜேஷ் கூறுகையில், ” ஸ்டுடியோ காலா என்ற இந்த விழா மூலம் எங்கள் நிறுவன பங்குதாரர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறோம். தற்போது 54 கிளைகளுடன் செயல்படும் எங்கள் நிறுவனம் அடுத்த ஓர் ஆண்டுக்குள் 100 கிளைகளுடன் செயல்படும் என்ற இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
அழகுக்கலை குறித்த பயிற்சி வழங்க எங்கள் ஸ்டுடியோ அகாடமி சென்னை கோவையில் செயல்பட்ட் வருகிறது.
ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு இலவசமாகவே பயிற்சி வழங்குகிறோம். அதோடு ரூ.10 ஆயிரம் முதல் வெவ்வேறு நாட்கள் அடிப்படையில் எங்கள் பயிற்சி வகுப்பு செயல்படுகிறது.” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்டுடியோ 7 நிறுவனத்தை சேர்ந்த வினோத்குமார், பிரதீப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
– சீனி,போத்தனூர்.