கோவை 99வது வார்டு கோனவாய்கால் பாளையம் அங்கன்வாடி மையத்தில் அரசு சுகாதாரதுறை ஏற்பாடு செய்த கோரோனா தடுப்புஊசி முகாம் நடைபெற்றது.
உலகமெங்கும் கொரோனா என்னும் கொடிய நோய் தொற்று பரவி பல லட்சக்கணக்கான உயிர்களை காவு வாங்கியதை அனைவரும் பார்த்துள்ளோம். நமது தமிழ்நாட்டில் இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில், சற்று குறைவாக காணப்படுவதால் இந்த கோரோனா நோய்த்தொற்றை முற்றிலும் விரட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அதன் காரணமாக போத்தனூர் குறிச்சி
99 வார்டில் இந்த மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை கோவை 99வது வார்டு மாமன்ற உறுப்பினர் மு.அஸ்லாம் பாஷா தொடங்கி வைத்தார். அருகில்வட்ட பொருப்பாளர் முஹம்மது ஜின்னா மற்றும் கழக உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஈசா, செய்யதுகாதர்.