கொடநாடு வழக்கில் முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் தனிப்படை போலீசார் மீண்டும் விசாரணை நடத்தியிருக்கின்றனர் .
இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த விசாரணை நடந்துள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோவை காவலர் பயிற்சி மையத்தில் இருக்கும் அலுவலகத்தில் கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடும் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொடநாடு வழக்கு தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் விசாரணை நடைபெற்றது. இரண்டு மாதங்களுக்கு பின்னர் தற்போது விசாரணை நடைபெறுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டில் சம்பவம் நடந்தபோது அப்போது கவுண்டம்பாளையம் எம்எல்ஏவாக இருந்த ஆறுக் குட்டியிடம் விசாரணை நடைபெற்றது.
உதகை எஸ்பி விசாரணை நடத்தி இருந்தார். தற்போது இந்த வழக்கில் மேல் விசாரணை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் ஆறுக்குட்டி எம்.எல்.எவிடம் தனிப்படைபோலீசார் மீண்டும் விசாரணை நடத்தியுள்ளனர். ஆறுக்குட்டியிடம் மீண்டும் விசாரணை நடைபெற்றுள்ளதால் கொடநாடு வழக்கில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன்.
I. அனஸ்.