பொள்ளாச்சி ஆழியார் அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. தற்போது நீர்மட்டம் 76 அடியாக உள்ளது. இந்த அணையில் இருந்து 5 தடுப்பணைகள் வழியாக பாசனத்துக்காகவும் குடிநீருக்காகவும் பயன் படுத்தப்படுகிறது. ஆழியார் பள்ளிவழங்கள் தடுப்பணையில் பகல் நேரங்களில் உள்ளூர் வாசிகள் மட்டுமல்லாமல் வெளியூரிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் தடுப்பணையில் குளிப்பது வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை பழைய ஆயக்கட்டுக்கு செல்லும் பள்ளிவளங்கள் அணைப்பகுதியில் ராட்சச மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது அதிர்ஷ்டவசமாக அதிகாலை நேரம் மரம் விழுந்ததால் எவ்வித விபத்தும் இல்லாமல் தவிர்க்கப்பட்டது இந்த மரம் பகலில் விழுந்திருந்தால் பெரும் விபத்து ஏற்படுத்தி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக.
-அலாவுதீன் அனைமலை.