கோவை மாநகராட்சி 99வது வார்டு மாமன்ற உறுப்பினர் மு.அஸ்லாம் பாஷா அலுவலகத்தில் புனிதமிக்க ரமளான் மாதம் ஆரம்பமானது முதல் தினந்தோறும் நோன்பு திறக்க ஏற்ப்பாடு செய்யப்பட்டு வருகிறது,
நேற்றுசாரதா மில் ரோடில் அமைந்துள்ள செங்கோட்டையா உயர்நிலை பள்ளியில் நடைபெற்ற சிறுவர்கள் கால்பந்து போட்டியின் நிறைவு விழாவில் கோவை மாநகர துணை மேயர், வெற்றிச்செல்வன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
நிகழ்ச்சியில் குறிச்சி பகுதி செயளாளர். 95வது வார்டு கவுன்சிலர் எஸ்.ஏ.காதர், 97வது வார்டு கவுன்சிலர் தனலட்சுமி 100வது வார்டு கார்த்திக் மற்றும் 99வது வார்டு கவுன்சிலர் மு.அஸ்லாம் பாஷா கலந்துகொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த கோவை மாநகராட்சி துனை மேயர் திரு வெற்றிசெல்வன் அவர்கள் மு.அஸ்லாம் பாஷா அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்யிருந்த இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அது சமயம் திமுக கோவை மாவட்ட ஒருங்கிணைந்த இளைஞர்அணி முன்னாள் துனை அமைப்பாலரும் 99அ வட்ட பொருப்பாளரும்மான முஹம்மது ஜின்னா அவர்கள் முன்னிலையில் மூத்த கட்சி உறுப்பினர் இரும்பு கடை பீர் முகமது கட்சி உறுப்பினர் AS சாதிக், மற்றும் நண்பர்களுடன் ஶ்ரீராம் நகர், ஈஸ்வர் நகர். பகுதியை சேர்ந்த சுமார் 25 நபர்கள் திமுகவில் இனைந்தார், புதியதாக திமுகவில் இணைந்த கட்சி உறுப்பினர்களை துனை மேயர் வெற்றிசெல்வன் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஈசா, செய்யது காதர் குறிச்சி.