மலைகளின் இளவரசி என்று பெயர் பெற்ற உதகையில் சீசன் துவங்கிய நிலையில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வந்தவண்ணம் இருக்கின்றனர் இதனால் ஏற்படும்
வாகன நெரிசலை தவிர்க்கும் பொருட்டு
ஊட்டி – குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலை 16-ம் தேதி முதல் ஒரு வழிபாதையாக மாற்றம் – மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்திரவிட்டுள்ளார்.
அவர் விடுத்த அறிக்கையில்:
மேட்டுபாளையத்தில் இருந்து குன்னூர், ஊட்டிக்கு வரும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு
இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே அனுமதி.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி நோக்கி வரும் இதர வாகனங்கள் குன்னூர் வழியாக வர அனுமதி.
குன்னூரிலிருந்து கோவை மற்றும் மேட்டுப்பாளையம் செல்ல
இளித்தெரை கட்டபெட்டு வழியாக கோத்தகிரி வழியாகவும்,
ஊட்டியில் இருந்து கோவை மற்றும் மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியில் மாற்றுப்பாதையில் செல்லுமாறு
மாவட்ட நிருவாகத்தின் சார்பில் அறிவுருத்தப்பட்டுள்ளது.
செய்தியாளர்
-ச.கலையரசன் மகுடஞ்சாவடி.