ஓராண்டிற்குள் 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு! சிங்கம்புணரி நிகழ்வில் அமைச்சர் பங்கேற்பு!

தமிழ்நாட்டில் வேளாண் உற்பத்தியினை பெருக்கி, உழவர்களின் நலனை மேம்படுத்தும் நோக்குடன் 19.11.1990 அன்று, அன்றைய முதலமைச்சர் கலைஞர், அனைத்து உழவர்களுக்கும் இலவச மின்சாரம் என்ற அறிவித்து விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்தார்.

அதன்பின்பு, 2011 முதல் 2021 வரை உழவர்களுக்கு ஆண்டுக்குச் சராசரியாக 22,100 மின் இணைப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டன. புதிய இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும் இணைப்புகள் வழங்கப்படவில்லை. 31.03.2021 நிலவரப்படி, பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 4,52,777 வேளாண் விண்ணப்பங்கள் பதிவுசெய்து நிலுவையில் இருந்தன.

இந்தக் குறையைத் தீர்க்கும் வண்ணம், உழவர்களின் நலனை எப்போதுமே முதன்மையாக கருதக்கூடிய திமுக அரசு, ‘2021-2022ஆம் ஆண்டில் 1,00,000 வேளாண் மின் இணைப்புகள் வழங்குவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும்’ என கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவித்தது.

மக்களின் நலன் ஒன்றை மட்டுமே கருத்திற் கொண்டு செயல்படும் திமுக அரசு, இதுவரை இல்லாத வரலாற்றுச் சாதனையாக ஓராண்டில் ஒரு இலட்சம் மின் இணைப்புகளை வழங்கி ஒரு பெரிய சாதனையைப் படைத்திருக்கிறது.

தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில் ஓராண்டில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு பெற்றவர்களிடம் தமிழக முதல்வர் கானொலி காட்சி மூலம் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பயனாளிகள் பல்வேறு இடங்களிலிருந்து இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு, மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
விழாவிற்கு வந்த விவசாயிகளை மின்வாரிய அதிகாரிகள் முன்நின்று வரவேற்றனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற காணொலிக் காட்சி நிறைவு பெற்ற பின்னர், சிங்கம்புணரி சுற்றுவட்டாரத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் இணைப்புப் பெற்ற விவசாயிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கிப் பேசிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், ”ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக காத்திருந்த 1084 விவசாயிகளுக்கு, 1379 ஏக்கர் பாசன பரப்பு பயனடையும் வகையில் இந்த திட்டம், சிவகங்கை மின் பகிர்மான வட்டம் திருப்பத்தூர் கோட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதாகத்” தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சந்திரா, சிங்கம்புணரி வட்டாட்சியர் கயல்செல்வி, மின்வாரிய செயற்பொறியாளர் செல்லத்துரை, சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் இந்தியன் செந்தில், சிங்கம்புணரி மின் வாரிய உதவி செயற்பொறியாளர் சாத்தப்பன், திருப்பத்தூர் உதவி செயற்பொறியாளர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp