கோவை,திருப்பூர் மற்றும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடங்கிய சுமார் 120 சங்கங்களை கொண்டு 324-C அரிமா சங்கம் இயங்கி வருகிறது.இந்தச் சங்கத்தின் வருடாந்திர மாநாடு மற்றும் மாவட்ட ஆளுநர் மற்றும் துணை ஆளுநர்கள் தேர்தல் என இரண்டு நாட்கள் நிகழ்ச்சி கோவை மதுக்கரை மார்க்கெட் சாலையில் உள்ள லிண்டாஸ் மகாலில் நடைபெற்றது..அரிமா சங்கத்தின் வழிகாட்டுதல் குழு தலைவர் சசிகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,முன்னதாக அரிமா சங்க மாநாடு நடைபெற்றது.இதில் அரிமா சங்க நிர்வாகிகள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.விழாவில் வழிகாட்டுதல் குழுவினர் அனைவரையும் வரவேற்றனர்.மாவட்ட ஆளுநர் நடராஜ் துவக்க உரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக பன்னாட்டு அரிமா இயக்குனர் சம்பத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக பன்முக குழு ஒருங்கிணைப்பாளர் கருணாநிதி,கவுரவ விருந்தினராக பன்னாட்டு அரிமா ஒருங்கிணைப்பாளர் மதனகோபால் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில்,மாவட்ட ஆளுநர் நடராஜன் தேர்தல் பணிகளை துவக்கி வைத்தார்.
தேர்தல் அலுவலராக சாரதாமணி பழனிச்சாமி செயல்பட்டார். அரிமா சங்க ஆளுநர் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற நிர்வாகிகள் வாக்களித்தனர்.இதில் மாவட்ட ஆளுநராக ராம்குமார் முதல் துணை நிலை ஆளுநராக ஜெயசேகரன்,இரண்டாம் துணை நிலை ஆளுநராக நித்யானந்தம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்தலுக்கான முழு ஒருங்கிணைப்பு பணிகளை மாவட்ட அரிமா சங்க நிர்வாகிகள் சூரி நந்த கோபால்,உதயகுமார்,கோபாலகிருஷ்ணன், பிரகாஷ் ரவிச்சந்திரன் மற்றும் செய்தி தொடர்பாளர் அரிமா செந்தில் குமார், ஆகியோர் செய்திருந்தனர்.வருடாந்திர தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு,சமுதாயம் சார்ந்த சேவை பணிகளில் சிறந்து செயல்பட்ட அரிமா சங்க நிர்வாகிகளுக்கு பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
– சீனி,போத்தனூர்.