தமிழ்புத்தாண்டு வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. வெள்ளிக்கிழமை புனித வெள்ளி என்பதால் விடுமுறை ஆகும். அதுபோன்று சனி, ஞாயிறும் விடுமுறை என்பதால் தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை வருகிறது.
இதனால் கோவையில் வேலை செய்து வரும் வெளியூரை சேர்ந்தவர்கள் பலர் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பினார்கள். சிலர் மோட்டார் சைக்கிள்களிலும், சிலர் கார்களிலும் தங்கள் ஊருக்கு புறப்பட்டனர்.
அதுபோன்று தமிழ்ப்புத்தாண்டுக்கு பொருட்கள் வாங்க பலர் கடைகளுக்கும் சென்றனர். இதன் காரணமாக பூ மார்க்கெட் பகுதி, அவினாசி ரோடு, சத்தி ரோடு, திருச்சி சாலை உள்பட பல சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதற்கிடையே மழையும் தொடர்ந்து பெய்து கொண்டு இருந்ததால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
சில பகுதிகளில் பல நிமிடங்கள் வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கி காத்து நின்றனர். பின்னர் நேரம் செல்ல செல்ல போக்குவரத்து நெரிசல் குறைந்ததால், அவர்கள் தங்கள் இடங்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.