கோவை மாவட்ட நிர்வாகம் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது இந்த வகையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நாய்க்கன்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு ஏப்ரல் 28ஆம் தேதி நேற்று இரண்டாம் தவணையாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசி முகாமில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள், சுகாதார செவிலியர்கள் இருந்தனர். இதேபோல குஞ்சிபாளையம் மற்றும் வக்கம்பாளையம் போன்ற அரசு பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அலாவுதீன் ஆனைமலை.