கோவை மாவட்டம் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல் பகுதியில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கடுமையாக உயர்த்திய மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் இருசக்கர வாகனத்திற்கும்,சிலிண்டருக்கும் மாலை அணிவித்தும் மாட்டு வண்டியை முன்னிறுத்தி நூதன முறையில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
மேலும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியதோடு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-M.சுரேஷ்குமார்.