கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு செல்லும் சாலையில் மகாலிங்கம் கல்லூரி அருகே மேம்பாலம் அமைக்கும் பணி நீண்ட நாள்களாக நடைபெற்று வந்த நிலையில்,
இரு சக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் ஊத்துக்குளி வழியாக மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது.
அந்தப் பாதையானது ஊத்துக்குளி டு நல்லூர் செல்லும் சாலை அந்த சாலையில் பல இடங்களில் சாலை மிகவும் பழுது அடைந்து ஆட்கள் பதுங்கும் குழிகள் போன்று மாறி விடுமோ என்ற அச்சத்தில் வாகன ஓட்டிகள் பயணிக்கின்றனர்.
உடனடியாகசம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு சரி செய்து தர வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு. பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு பால வேலை முழுவதும் முடிவடைந்த நிலையில் பாலம் இன்னும் திறக்கப் படாமல் இருப்பது வாகன ஓட்டிகளுக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அலாவுதீன் ஆனைமலை.