கோவை:பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்தவர் அரவிந்த் (24).சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளை பழைய பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பேக்கரி முன் நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றார்.சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தவர் அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்து உள்ளார்.
பைக் திருடபட்டதை அறிந்து இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அருகில் உள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு மேற்கொண்டனர்.விசாரணையில் பொள்ளாச்சி புரவிபாளையம் பகுதியை சேர்ந்த பாரதி கண்ணன் (21) மற்றும் திருப்பூரை சேர்ந்த வெள்ளிங்கிரி என்கிற தமிழ்செல்வன் (24) ஆகியோர் மோட்டார் சைக்கிளை திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். பின்னர் குற்றவாளிகள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்!!
நாளையவரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.