உலகம் முழுவதிலும் இஸ்லாமிய மக்கள் நேற்று முன்தினம் முதல், ரம்ஜான் நோன்பை துவக்கினர். ரம்ஜான் நோன்பு மேற்கொள்வது இஸ்லாமியர்களின் கடமைகளில் ஒன்று. இது, எதிர்பார்ப்பின்றி இறைவனுக்கு செய்யும் கடமை. இதன் வாயிலாக, ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடுகளை இறைவன் களைந்து, உலகில் சமத்துவத்தை ஏற்படுத்துகிறான், என, ரம்ஜான் நோன்பு உணர்த்துகிறது.
ரம்ஜான் மாதத்தில், 30 நாட்கள் நோன்பு கடைபிடிப்பது வழக்கம். இதில், சிறப்பு தொழுகை, ‘லைலத்துல் கத்ர்’ குறித்த சிறப்பை விளக்குகிறார், பொள்ளாச்சி வட்டார ஜமாஅத்துல் உலமா பொருளாளர்.பொள்ளாச்சி – கோவை ரோடு, சங்கம்பாளையம் பள்ளிவாசல் இமாமும், பொள்ளாச்சி வட்டார ஜமாஅத்துல் உலமா பொருளாளருமான சையது சுல்தான் அலி உலவி கூறியதாவது:30 நாள் நோன்பில், 27வது நாளை, ‘லைலத்துல் கத்ர்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் தான் அல்லாஹ் பூமிக்கு குர்ஆன் அனுப்பி வைத்தார். அந்த நாளை கொண்டாடவும், அன்று நன்மைகள் பெறவும் இரவு முழுவதிலும் சிறப்புத்தொழுகை நடத்தப்படுகிறது.
‘லைலத்துல் கத்ர்’ நாளின் இரவு சிறப்பு தொழுகை, ஆயிரம் மாதங்களை விட சிறந்தது. ஆயிரம் மாதங்கள் கடமைகளை செய்து பெறும் நன்மைகளைவிட அதிகமாக, அன்றைய நாளில் பெறலாம்.மற்ற நோன்பு நாட்களில் பச்சரிசி, சில காய்கறிகள் அடங்கிய கஞ்சி, புதினா சட்னி, பழங்கள் வழங்கப்படுகிறது. ‘லைலத்துல் கத்ர்’ அன்று கறிக்கஞ்சி எனப்படும், ஆட்டு இறைச்சி கலந்த கஞ்சி வழங்கப்படுகிறது.தற்போது, கடும் வெயில் நிலவுவதால், பள்ளிவாசல்களில் இப்தார் கஞ்சி மற்றும் உணவு வழங்கும் போது, நோன்பு இருப்போர் கோடை வெயிலில் நீர் சத்து குறையாமல், வெயிலை சமாளிக்க, கஞ்சியுடன் அதிகப்படியான பழங்கள் வழங்கப்படுகிறது.இவ்வாறு, தெரிவித்தார்.
அற்புதங்கள் ஏராளம்உடுமலை, செல்லம் குடியிருப்பு மிஸ்பாஹுல் ஹுதா பள்ளிவாசல் செயலாளர் அப்துல் மஜீத்: ரம்ஜான் மாதம் என்பது, சிறந்த இரவுகளை கொண்ட மாதமாகும். ஒவ்வொரு தகஜத் தொழுகை உடைய நேரத்தில், இறைவன் முதல் வானத்தில் இறங்கி என்னிடம் உதவி கேட்போர் யாரும் உண்டா கேளுங்கள்; என்னிடம் ஆயுள் நீடிக்க கேட்பார் யாரும் உண்டா கேளுங்கள்; என்னிடம் ரஜக்கு கேட்பவர்கள் உண்டா கேளுங்கள் என்று இறைவன் கூறுவதாக இமாம்கள் தெரிவிக்கின்றார்கள்.இஸ்லாமியர்களுக்கு, ஐந்து கடமைகளில் ஒன்றான, ரம்ஜான் மாதத்தில் நோன்பு வைக்கும் கண்ணியம் மிக்க மாதம் என ஏராளமான சிறப்புகளை கொண்டதாகும். அற்புதங்கள் நிறைந்திருக்கும் இந்த புனித மாதத்தில் நோன்பு இருப்பது
அவசியம்.
உடுமலை பெரியகோட்டை, யு.கே.பி.,நகர், மிஸ்பாஹுல் ஹுதா பள்ளிவாசல், இமாம் ஹைதர் அலி ரியாஜி:ரம்ஜான் மாதம் முழுவதும், இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பது அவசியமாகும். இன்னல்கள் போக்க, இறைவன் அருள் கிடைக்க, ஐந்து முறை தொழுக வேண்டும்.
ரம்ஜான் மாதத்தை அடைந்து, அதை கண்ணியம் செலுத்தாதவர்கள், நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயரைக் கேட்டு சலாம் சொல்லவில்லையோ, அவர்களுக்கு நல்வாழ்வில்லை என்று ஜிப்ரீல் இஸ்லாம் துவா செய்ய நபி பெருமானார் சல்லல்லாஹு செல்லம் அவர்கள் ஆமீன் கூறியுள்ளார்.அந்தளவிற்கு, இறைவன் அருள் கிடைக்கும். ரம்ஜான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து, இறைவனை தொழுதால், சிறந்த வாழ்வு கிடைக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.நோன்பு வைப்பதால், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், வாழ்விலும், பல நன்மைகள் பெறுகின்றனர். அல்லாஹுத்தஆலா இந்த ரமலானை, பரிபூரணமான அமல் செய்யக்கூடிய மக்களாக அனைவருக்கும் கிருபை செய்ய வேண்டும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.