கோடநாடு வழக்கு பூங்குன்றனிடம் விசாரணை..!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்களை திருடப்பட்டது.

இது தொடர்பாக சயன்,சதீசன்,உதயகுமார்,ஜம்சிர் அலி,தீபு , சந்தோஷ்,திலிப், ஜாய்,வாளையார் மனோஜ்,மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது கைது செய்யப்பட்டனர் . இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ் சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். இதனிடையே கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணையை துவக்கிய நீலகிரி காவல் துறையினர் 5 தனிப் படைகள் அமைத்து கூடுதல் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர் .

சாட்சிகள்,குற்றம் சாட்டப்பட்டவர்கள்,அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 200 க்கும் மேற்பட்டோரிடம் தனிப்படை காவல் துறையினர் கூடுதல் விசாரணை நடத்தியுள்ளனர்.

இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சயன் , ஜம்சிர் அலி , சந்தோஷ் சாமி , மனோஜ் சாமி , சதீசன் , பிஜின் குட்டி , தீபு உள்ளிட்டோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதேபோல கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன்,சசிகலா , சசிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமன்,முன்னாள் எம்.எல். ஆறுக்குட்டி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இதனிடையே கோடநாடு கம்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை வழக்கு மற்றும் கனகராஜ் விபத்து வழக்குகளை காவல் துறையினர் மறு விசாரணை நடத்தி வருகின்றனர். கோடநாடு கொலை,கொள்ளை வழக்கில் சாட்சியங்களை அழித்ததாக கனகராஜின் சகோதாரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரை நீலகிரி மாவட்ட காவல் துறையினர் கைது செய்தனர்.
கடந்த சில மாதங்களாக முன்னேற்றம் இல்லாமல் இந்த வழக்கு இருந்து வந்த நிலையில் , மீண்டும் சூடுபிடித்துள்ளது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி,அவரது உதவியாளர் நாரயணசாமி,மகன் அசோக்குமார் ஆகியோரை தொடர்ந்து சசிகலாவிடம் விசாரணை நடத்தப்பட்டது .

இதையடுத்து அதிமுக மாநில வர்த்தக அணி நிர்வாகி சஜீவன்,அவரது சகோதரர் சிபி ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கடந்த வாரம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் தனிப்படை காவல் துறையினர் இரண்டு நாட்கள் விசாரணை நடத்தினர். கோவை காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர் தலைமையில் இரண்டு நாட்களில் 18 மணி நேரம் விசாரணை நடைபெற்றது .

இதனைத் தொடர்ந்து கடந்த 2 ம் தேதி முன்னாள் எம் . எல் . ஏ . ஆறுக்குட்டியின் உதவியாளர் நாரயணசாமியிடம் இரண்டாவது முறையாக தனிப்படை போலீசார் விசாரணை செய்தனர் . இந்நிலையில் மூன்றாவது முறையாக இன்று மீண்டும் பூங்குன்றனிடம் காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் .

கோடநாடு,போயஸ்கார்டன் என ஜெயலலிதா தங்கி இருக்கும் இடங்களில் ஜெயலலிதாவின் நிழலாக இருந்தவர் பூங்குன்றன். ஜெயலலிதாவைச் யாரெல்லாம் சந்திக்கிறார்கள்,எது தொடர்பாக சந்திக்கிறார்கள் என்பதும்,யாரைல்லாம் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்பதையும் பார்த்துக்கொள்பவராக இருந்தவர் பூங்குன்றன். மூன்றாவது முறையாக பூங்குன்றனிடம் நடத்தப்படும் விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன்
பொள்ளாச்சி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp