கோவை மாவட்டம் ஆனைமலையில் தனியார் திருமண மண்டபத்தில் மகா இயற்கை நிலையத்தின் சார்பாக “நல்வாழ்வும் நல் உணவும்” பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஜூன் 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 7 மணி அளவில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை கனகரத்தினம்T.A கிருஷ்ணசாமி அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சி OVR.சோமசுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு OSM.பாலு வரவேற்புரையாற்றினார். தேவானந்த சரஸ்வதி சுவாமிகள்,T. கனகசம்பத், சுரேந்திரன் போன்றவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் சிறப்புரை யாளர்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் இதய நோய் சர்க்கரை நோய் இரத்த அழுத்தம் கை வலி கால் வலி மூட்டு வலி முழங்கால் வலி தோல் நோய்கள் போன்ற அனைத்து நோய்களின் தீர்விற்கு சிறப்புரையாளர்களால் ஆலோசனை வழங்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அலாவுதீன், அனைமலை.