நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திப் பேசிய பாஜகவின் நிர்வாகிகள் நுபுர் சர்மா, மற்றும் நவீன் ஜிண்டால், ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தியும், அதற்காக குரல் கொடுத்த உத்திரப்பிரதேச மக்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடித்த பாசிச பாஜக அரசை கண்டித்தும்.
கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ரயில் நிலைய முற்றுகை போராட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தகவல் தொழில்நுட்ப அணி மாநில பொருளாளர் சம்சுதீன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், அனிபா, ஜாபர் சாதிக், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சியின் மாநிலச் செயலாளர் MH.ஜாபர் அலி அவர்கள் கண்டன கோஷம் எழுப்பி போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
மேலும் மாநில துணைச் செயலாளர் A.அப்துல் பஷிர், IKP மாநில செயலாளர் லேனா இசாக் ஆகியோர் கண்டன கோஷங்களை முழங்கினர். இப்போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் பாசிச பாஜக அரசின் மதவாத நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் நிலையத்திற்குள் நுழைய முற்பட்டனர் அப்போது காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பான சூழல் காணப்பட்டது.
பின்னர் போராட்டத்தில் பங்கேற்ற திரளான மக்களை காவல் துறை கைது செய்தது. போராட்டத்தில் மாவட்ட, நகர, பகுதி, கிளை கழக நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.