கோவை செல்வபுரம் செல்வசிந்தாமணி குளத்தை சுற்றி 1.30கிலோமீட்டர் பரப்பளவில் நடை பாதை
(வாக்கிங்)பணிகளை கடந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் கடந்த அதிமுக ஆட்சியில் உரூவாக்கப்படடு பராமரிக்கப்பட்டது.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னால் சரிவர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதில்லை என்ற குற்றசாட்டு பொதுமக்களிடத்திலே நிலவுகிறது. உள்ளாட்சி தேர்தலுக்குபின் மாமன்ற உறுப்பினர்களும் சரிவர கண்டு கொள்ளாமல் பராமரிப்பின்றி இருக்கிறது. நடை மேடையில் புற்கள் செடிகள் வளர்ந்து கிடப்பதால் வாக்கிங் செல்பவர்களும் மிக சிரமத்திற்குள்ளா கிறார்கள் எனவே இதனை சரிசெய்வது கவுன்சிலர்களா ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகளா யாரிடம் இதனை சொல்வது என்று கூட தெரியாமல் பொதுமக்கள் இருக்கிறார்கள்.
எதுவாக இருந்தாலும் சம்மந்தபட்ட அதிகாரிகள் இதனை சரிசெய்து கொடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர் முஜீப் ஆவர்களின் கோரிக்கையாக உள்ளது!!
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.