கோவை மாவட்டம் போத்தனூர் 96 வது வார்டு மாமன்ற உறுப்பினர் குணசேகரன்
தனது வார்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் உடனுக்குடன் சரிசெய்து மக்கள் மத்தியில் நற்பெயர்களை வாங்கி வருகிறார். நீண்ட நாட்களாக பழுதடைந்து விபத்துக்குள்ளாகும் நிலையில் உள்ள மின்கம்பத்தை மக்கள் கூறியவுடன் விபத்தை தடுக்கும் விதமாக செயல்பட்டு தனது வார்டில் உள்ள மின்கம்பத்தை உடனடியாக மாற்றி தந்தார்.
இந்த நிகழ்வு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோல் சாக்கடை, பிரச்சனை தார்சாலை, மின்விளக்கு, குடிநீர், போன்ற அடிப்படை பிரச்சினைகளை உடனுக்குடன் சரி செய்து வருவதால் 96வது மாமன்ற உறுப்பினர் குணசேகரன் அவர்களை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
நாளை வரலாறு செய்திக்காக,
-ஈசா.