கோவை மாநகராட்சி 86வது வார்டில் உள்ள கழிவுநீர் பண்ணையயை நேற்றை முந்திய தினம் மாநகராட்சி கமிஷ்னர் பிரதாப் இ ஆ ப ஆய்வு மேற்கொண்ட நிலையில் கழிவுநீர் கொட்டுவதற்காக காலை முதல் வண்டிகள் வருவதால் பள்ளிக்கூடத்திற்க்கும் வேலைகளுக்கும் செல்பவர்களுக்கு சிரமமாக உள்ளது என்று கோவை மாநகராட்சி ஆணையாளர் அவர்களிடம் மனிதநேய மக்கள் கட்சியின் மாமன்ற உறுப்பினர் இ. அஹமது கபீர் MC அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க கழிவுநீர் பண்ணை வாசல் முன்பாக நேரப் பட்டியலை மாநகராட்சி நிர்வாகம் வைத்துள்ளது.
நாளை முதல் இது நடைமுறைக்கு வரும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கும் மாமன்ற உறுப்பினருக்கும்
பொதுமக்கள் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப் கோவை.