கோவை மாவட்டம் ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட கோட்டூரிலுள்ள சந்தைப்பேட்டையில் சின்னத்துரையின் மகன் உதயகுமார் இவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டு தனது தாத்தா வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இந்த மாணவர் இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் தேர்வு எழுதியுள்ளார் கடந்த 20ஆம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகியது. இதில் இவர் பல்வேறு பாடங்களில் தோல்வியடைந்து மன உளைச்சலில் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே மன உளைச்சலில் இருந்த உதயகுமார் கோட்டூரில் தனது தாத்தா வீட்டில் தாத்தா இல்லாத நேரத்தில் ஜூன் 21-ஆம் தேதி மதியம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த தகவலை கோட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு கோட்டூர் காவல் நிலைய போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்து. தற்கொலை செய்து கொண்ட மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுபற்றி கோட்டூர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பிளஸ் 2 தேர்வு தோல்விக்காக 12ம் வகுப்பு மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அலாவுதீன் ஆனைமலை.