பொள்ளாச்சி – ஆனைமலை – சர்க்கார்பதி பகுதியிலிருந்து பொள்ளாச்சி பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த 34A / 37A என்ற அரசு பேருந்து சீனிவாசபுரம் ரயில்வே பாலத்தில் செல்லும் பொழுது, திருச்சியிலிருந்து – திருச்சூர் நோக்கி வந்து கொண்டிருந்த லாரி அரசு பஸ் மீது உரசியதாக கூறப்படுகிறது. இதனால் நிலை தடுமாறிய அரசுப்பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் பக்கவாட்டில் இருந்த சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிர்பலி எதுவும் ஆகவில்லை. அதே சமயம் இந்த விபத்தால் பல மணி நேரம் இந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-M.சுரேஷ்குமார்.