கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அதிமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி திமுகவில் இணையப் போவதாக தகவல்கள் வெளியானது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையில் அது முற்றிலும் பொய்யான தகவல் என வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதிமுக விசுவாசியான தமக்கு களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற விஷம நோக்கத்தில் இது போன்ற தவறான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தான் எப்போதும் அதிமுகவில் தொடரப்போவதாகவும் கூறினார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அலாவுதீன், ஆனைமலை.