தூத்துக்குடி மாவட்ட அதிமுகவிற்கு புதிய பொறுப்பாளரை அறிவித்த ஓபிஎஸ்க்கு இபிஎஸ் அணி கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். இதற்கு இபிஎஸ் அணி கண்டனம் தெரிவித்துள்ளது.
அது மட்டுமல்ல மாவட்டத்தில் உள்ள சட்ட மன்ற தொகுதிகள் மற்றி குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற நிகழ்வுகள் விளம்பர அரசியல் பன்ன வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் “அ.தி.மு.க. கழகத்திலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், எங்கள் கட்சிக்கு புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்க நீங்கள் யார்? கழகத்தில் கலகம் செய்வது ஏன்?” என தூத்துக்குடி மத்திய வடக்கு பகுதி எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர், 39வது வட்ட செயலாளர் சிற்றம்பலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஓட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.