சிங்கம்புணரியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையினை நேற்று (26.11.2022) மாநில வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநர் முனைவர் நடராஜன் ஆய்வு செய்து விவசாயிகளுடன் கலந்தாலோசித்தார். நேற்று காலை சிங்கம்புணரி வந்த முனைவர் நடராஜன், முதலில் உழவர்சந்தையில் உள்ள விவசாயிகளின் காய்கறி விற்பனைக் கடைகளையும், உழவர் உற்பத்தி நிறுவனங்களின் மதிப்பு கூட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடையினையும் ஆய்வு செய்தார்.
அங்கு ஒரு தென்னை மரக்கன்றையும் நட்டார்.
அங்கிருந்து சிவகங்கை தென்னை உற்பத்தியாளர் கம்பெனிக்குச் சென்ற அவர் அங்கு நடைபெறும் மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி, அந்த எண்ணையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகள் மற்றும் மாவட்டம் முழுமைக்குமான எண்ணெய் விற்பனை ஆகிய வணிக செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.
அதன் பின்பு சிங்கம்புணரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்குச் சென்ற அவர், அங்கு விவசாயிகளால் இருப்பு வைக்கப்பட்டிருந்த நிலக்கடலை, நெல் போன்ற வேளாண் விளைபொருட்களையும் பார்வையிட்டார். மேலும், வளாகத்திலுள்ள 25 மெ.டன் கொள்ளவு உள்ள குளிர்பதன கிட்டங்கியினையும் ஆய்வு செய்துவிட்டு, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொப்பரை கொள்முதல் செய்யும் திட்டத்தின் பயனாளிகளிடம் கலந்துரையாடினார். சிங்கம்புணரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதிதாக தொடங்கப்பட்ட மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் (eNAM) செயல்படும் விதம் குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது சிவகங்கை மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்), முனைவர் சுரேஷ், சிவகங்கை வேளாண் விற்பனைக்குழு செயலாளர் சாந்தி, வேளாண் அலுவலர் காளிமுத்து, கனிமொழி, புவனேசுவரி, விற்பனைக்கூட கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாயாண்டி, வேளாண் உதவி அலுவலர் ராதா, நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வின்போது சிங்கம்புணரி பேரூராட்சித் தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் இந்தியன் செந்தில், திமுக நகரச் செயலாளர் கதிர்வேல் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் இயக்குநர்கள் செல்வகுமார், குடோன்மணி, தியாகராஜன், ராஜமூர்த்தி, சேகர், சுப்பிரமணியன், செல்வம், தினேஷ்(CEO) ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்விற்கான முன்னேற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர் ரத்னகாந்தி சிறப்பாக மேற்கொண்டார்.
-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.