கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்குட்பட்ட 17வது வார்டு கவுன்சிலர் K.மணிகண்டன் ( அ.தி.மு.க ) நேற்று நகராட்சி அலுவலகத்திற்கு வேலை சம்பந்தமாக சென்றுள்ளார்.
அப்பொழுது அங்கிருந்த கவுன்சிலர் ரவிச்சந்திரன் ( தி.மு.க ) மணிகண்டனிடம் தகராறு செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த ஜெகா முடி 17வது வார்டு பொதுமக்கள் மற்றும் மணிகண்டன் உறவினர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகம் முன்பு ஒன்று கூடி தி.மு.க கவுன்சிலர் ரவிச்சந்திரனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொட்டும் பணியில் இரவு நேரத்தில் போராட்டம் நடைபெற்றதால் இச்சம்பவம் வால்பாறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
-M.சுரேஷ்குமார்.