சென்னை பல்லாவரம் ரயில் நிலையம் அருகே வாரம் தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் சந்தை மிகவும் பிரபலமானது. Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ இரு நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த சந்தையில் சென்னை மட்டுமின்றி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்து கடை கள் அமைத்து வியாபாரம் செய்கின்றனர்.
ஆயிரக் கணக்கான மக்கள் குறைந்த விலைக்கு வந்து பொருட்கள் வாங்கிச் செல் கின்றனர். இந்த சந்தைக்கு வாரம்தோறும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர்.
இங்கு உள்ள டாட்டூ கடைகளில் முறையான விழிப்புணர்வு இல்லாமல் அதன் ஆபத்தை உணராமல் இளைஞர்கள் டாட்டூ போட்டுக் கொள்கின்றனர்.
இயந்திரங்களின் மூலம் டாட்டூ எனும் நவநாகரீக பச்சை குத்தும் தொழிலும் ஈடுபட்டு நபர்கள் ஒரு எழுத்திற்கு ரூபாய் 50 வசூலிக்கின்றனர். உருவங்கள் மற்றும் சின்னங்கள் வரைவதற்கு அவற்றின் தன்மைகேற்ப ரூபாய் 300 வரை வசூலிக்கின்றனர். விலை மலிவு என்பதால் ஏராளமான மக்கள் மற்றும் இன்றைய இளைஞர்கள் ஆவலுடன் டாட்டூ வரைந்து செல்கின்றனர்.
டாட்டூ வரைய பயன்படுத்தப்படும் இயந்திரத்தில் பொருத்தப்படும் ஊசிகள் மாற்றப்படுகிறதா என்ற ஐயம் மக்கள் மத்தியில் எழுந்தள்ளது. இதனால் ரத்த பரிமாற்றத்தினால் ஏற்படக்கூடிய நோய்கள் மக்களிடையே பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே, சுகாதாரத்துறை மற்றும் கண்டோன்மண்ட் நிர்வாகம் நேரடியாக தலை யிட்டு டாட்டூ வரையும் தொழிலாளர்களை கண்டறிந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘டாட்டூ வரையும் தொழிலாளர்களிடம் ரத்த பரிமாற்ற தொற்று நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ஒரே ஊசியை பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் டாட்டூ வரைந்து கொள்ளும் நபரிடமே அந்த ஊசியை வழங்கிட வேண்டுமென அறிவுறுத்த வேண்டும். ஒரே ஊசியை பயன்படுத்துபவர்கள் மீது கைது மற்றும் அபராதம் போன்ற சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’ என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
-ருக்மாங்கதன். வடசென்னை.