கோவை மாவட்டம் பொள்ளாச்சி நேதாஜி வழி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ச.தர்மராஜ் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் அ.கோமதி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளார் ஜெய்னுலாப்தீன் பள்ளி வளர்ச்சி குழு வெள்ளை நடராஜ். துணைச்செயலாளர் கவிஞர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் கட்டுரை ப் போட்டி பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில் நிறைவாக குழந்தைகள் முன்னிட்டு
பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் மாணவிகளால் மரக்கன்று நடப்பட்டது. முடிவில் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் இஸ்மாயில் நன்றி கூறினார். இதில் பள்ளி மாணவிகள் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.