தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு காலாவதி மருந்துகள் வினியோகம் செய்யப்படுகிறதா? என்பது குறித்து மத்திய சுகாதார குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். மத்திய அரசு தேசிய சுகாதார குழுமம் மூலம் நாடு முழுவதும் சுகாதார திட்டங்களை மேம்படுத்துவதற்காக பல்வேறு பணிகளுக்கு நிதி ஒதுக்கி உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்திலும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்த பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு உள்ளதா, அந்த திட்டங்கள் மக்களை சென்றடைந்து உள்ளதா, உபகரணங்கள் முழுமையாக வாங்கப்பட்டு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக தேசிய சுகாதார குழுமத்தை சேர்ந்த குழுவினர் தூத்துக்குடிக்கு வந்தனர். அதனைக் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேப்பிலோடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய ஆய்வுக்குழும அதிகாரிகள் திடீரென ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
மருந்துகளின் தரம், மருத்துவமனையை தூய்மையாக வைத்து உள்ளனரா, முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறதா, வருகை பதிவேடு, மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வு பதாகை, சித்த மருத்துவப் பிரிவில் முறையான மருந்துகள் வழங்கப்படுகிறதா? உள்ளிட்டவைகளை தேசிய ஆய்வுக்குழுமும் ஆய்வு மேற்கண்டனர் இதில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் ஏராளமானோர் உடன் இருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஓட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.