கடந்த அதிமுக ஆட்சியில் 2001 ஆண்டு தரிசு நிலத்தை வாங்கி விளை நிலங்களாக மற்றும் திட்டம் அறிமுகம் செய்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள். அதன்படி இன்றும் தரிசு நிலங்களை விளைநிலமாக மற்றும் திட்டம் தொடர்கிறது.
வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விளைநிலமாக மாற்றி பயிர் சாகுபடி செய்தல் குறித்து மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்டம், எட்டையாபுரம் வட்டம், விளாத்திகுளம் வட்டாரம், தலைக்காட்டுபுரம் கிராமத்தில், வேளாண் வளர்ச்சி திட்டம் 2021-22ல் தரிசு நிலத் தொகுப்பினை, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் இன்று (09.12.2022) ஆய்வு செய்து தெரிவிக்கையில்:
தலைக்காட்டுபுரம் தரிசு நிலத்தொகுப்பில் 32 ஏக்கர் பரப்பளவில் இருந்த தரிசு நிலத்தில் இருந்த கருவேல மரங்கள் அகற்றப்பட்டு சாகுபடிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மேற்படி தொகுப்பில் 16 விவசாயிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு இரண்டு ஆழ்துளை கிணறு ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒரு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளி சக்தியில் இயங்கும் மின் மோட்டார் அமைக்கப்பட்டு நுண்ணீர்பாசனம் மூலம் பழமரக்கன்றுகள் பயிரிடப்படும் தற்சமயம் 7 ஏக்கர் பரப்பளவில் சூரியகாந்தி CO5 பயிரும், 24 ஏக்கரில் உளுந்து MOU5 பயிரிடப்பட்டுள்ளது. தொகுப்பில் அமைக்கப்பட்ட இரண்டு பண்ணைக் குட்டைகள், தூர் வாரப்பட்ட ஊரணி ஆகியற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் தலைக்காட்டுபுரம் ஊராட்சியில் தலைக்காட்டுபுரம் ஊராட்சி அலுவலகம், குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி, NREGS அங்கன்வாடி கட்டிடம் பணிகள் பழைய பள்ளி கட்டிடம், பொது விநியோக கட்டிடம் ஆகியவற்றில் நடைபெறும் பணிகள் பார்வையிட்டு விரைந்து பணிகளை முடிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.ஐ.முகைதீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ), ஆ.நாச்சியார் அம்மாள், செயற்பொறியாளர் பா.கிளாட்வின் இஸ்ரேல், வேளாண்மை உதவி இயக்குநர் கீதா, தோட்டக்கலை உதவி இயக்குநர் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் சங்கரநாராயணன், எட்டையாபுரம் வட்டாட்சியர் கிருஷ்ணகுமாரி, விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல் முத்துக்குமார், வேளாண்மை அலுவலர் நவநீதன், உதவி பொறியாளர் ரமா, பஞ்சாயத்து தலைவர் பச்சைபெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர். வேளாண்மை உதவி அலுவலர் சுதாகர், அருள்பிரகாஷ், சுரேஷ், கௌதமி, மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.