தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் 100க்கு மேற்பட்ட மனுக்கள் –
ஆட்சியர் தகவல்!
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தலைமையில் நேற்று நடைபெற்றது.
ஒவ்வொரு மாதமும் மக்கள் குறைதீர் கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருகிறது. அதன்படி நேற்று காலையில்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 100 க்கு மேற்பட்டகோரிக்கை மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டது.
https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru
கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ் குமார் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
–முனியசாமி ஓட்டப்பிடாரம்.