தூத்துக்குடி மாவட்டத்தில் வெளி மாநில கழிவுகளுக்கு தடை !!!
தூத்துக்குடி மாவட்டத்திற்கு, வெளி மாநிலங்களில இருந்து கழிவுகளை ஏற்றிவந்தால் லாரிகள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடிக்கு சரக்கு வாகனங்களில் வெளிமாநிலங்களிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகள், மருத்துவக்கழிவுகள், இறைச்சி கழிவுகள், போதைப்பொருட்கள் குட்கா போன்றவற்றை ஏற்றி வருவதை தடுக்கும் விதமாக விழிப்புணர்வு கூட்டம் தென்பாகம் காவல் நிலையத்தில் நகர உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் சத்தியராஜ் தலைமையில் நடந்தது
திருப்பூர் பகுதிகளில் இருந்து ஒட்டப்பிடாரம் அருகே மருத்துவ மற்றும் இதர கழிவுகள் கொட்டப்படுகிறது என்று சமுக ஆர்வலர்கள் நாளைய வரலாறு செய்திகளுக்காக தகவல் அளித்தனர் இதையும் மாவட்ட காவல் துறை கண்காணிக்க வேண்டும்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கூட்டத்தில் அண்டை மாநிலங்களில் இருந்து கோழி கழிவுகள், மீன் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் மருத்துவ கழிவுகள், கட்டிடக்கழிவுகள், மற்றும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் கழிவுகளை வாகனங்களில் கொண்டு வந்து தூத்துக்குடி நகர எல்லைக்குள் கொட்ட கூடாது. மேலும் கழிவுகளை தனியாருக்கு சொந்தமான தோட்டங்கள் வீடுகள் முன்பு குழி தோண்டி புதைக்க கூடாது. இதனை மீறினால் லாரி டிரைவர் கிளீனர் மற்றும் லாரி உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதோடு லாரிகள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதற்கு அனைத்து வாகன உரிமையாளர்கள் டிரைவர் கிளீனர்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி நகர துணை கண்காணிப்பாளர் சத்யராஜ் கேட்டுக்கொண்டார். இதில் லாரி புக்கிங் ஏஜென்ட் அசோசியேஷன் சங்கத் தலைவர் சுப்புராஜ், லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் முருகன், கண்டெய்னர் லாரி உரிமையாளர் சங்க செயலாளர் சோமசுந்தரம் உள்பட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப் இன்ஸ்பெக்டர்கள் கெங்கநாத பாண்டியன், முருகப்பெருமாள், ராமலிங்கம் உள்பட அனைத்து காவல் நிலைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-முனியசாமி ஓட்டப்பிடாரம்.