கோவை மாவட்டம் போத்தனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் முருகேஷ், இவருக்கு நேற்று வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் பகுதியில் சட்டவிரோதமாக சீட்டு விளையாடி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்ட பொழுது அதே பகுதியைச் சேர்ந்த 69 வயதான கோசல் ராம், 67 வயதான கோபிநாதன், 58 வயதான சிலுவை அருள் பிரான்சிஸ், ஆகிய மூவரும் சீட்டு விளையாடியதாக கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அவர்களிடமிருந்து 2,100 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. மூவரையும் கைது செய்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.