உக்கடம் பேருந்து நிலையப் பகுதிகளில் உள்ள வணிக வளாக கட்டிடங்கள் இடிக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது!!
கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக உக்கடம்- ஆத்துப்பாலம் மேம்பால பணிகள் நெடுஞ்சாலை துறையினரால் துரிதமாக நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளரும் அவ்வப்போது நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் உக்கடம் பேருந்து நிலையத்தை ஒட்டி மேம்பாலம் வரவுள்ளதால் அப்பகுதியில் உள்ள வணிக வளாக கட்டிடங்களில் செயல்பட்டு வந்த சுமார் 20க்கும் மேற்பட்ட கடைகள் இடிக்கும் பணிகள் துவங்கின.
மேலும் பேருந்து நிலையம் உட்புறம் அமைந்திருந்த கேரள மாநிலம் செல்லும் பேருந்து நிறுத்த பிளாக்குகளும் அகற்றப்பட்டு வருகிறது. எனவே கேரள மாநிலங்கள் செல்லும் பேருந்துகள் அடுத்த பிளாக்கில் நிற்கும் என அறிவிக்கபட்டுள்ளது!!!
நாளையவரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.