சுதந்திரப் போராட்டத் தியாகி பொதுவுடமை இயக்கப் போராளி ப.ஜீவானந்தம் நினைவு நாள் பூதப்பாண்டியில் தோழர்கள் மலர் மரியாதை!!
ப.ஜீவானந்தம் சுதந்திரத்திற்காக பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு 10 ஆண்டுகள் சிறை பட்டவர், தேசத்தந்தை மகாத்மா காந்தியால் நீங்கள் இந்தியாவின் சொத்து என்று அழைக்கப்பட்டவர், பொதுவுடமை இயக்கத்தில் 40 ஆண்டுகாலம் பணியாற்றியவர்.
சுதந்திரப் போராட்டத் தியாகி,பொதுவுடைமை இயக்கப் போராளி,இலக்கியப் பேரரசான் இன்று போற்றப்படும் ப.ஜீவானந்தம் 1963 ஜனவரி 18 ல் மறைந்தார்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இன்று அவரது 60 வது நினைவு நாளில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அவரது திருவுருவ படத்திற்கு மலர் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கன்னியாகுமாரி பூதப்பாண்டியில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தோழர் V.தங்கப்பன் போக்குவரத்து துறை ஓய்வு அவர்கள் மாலை அணிவித்தார், தோழர் எஸ்.அனில்குமார் MA, பூதப்பாண்டி பேரூராட்சி துணைத்தலைவர் அவர்கள் தலைமை தாங்கினார்,
தோழர்.எஸ்.நாராயணசாமி Cpi மாவட்டத்துணைசெயலாளர் அவர்கள் முன்னிலை வகுத்தார் மேலும் இந்நிகழ்ச்சியில் தோழர் கோபாலகிருஷ்ணன், தோழர்.தா.மகேஷ் பூதப்பாண்டி கிளை பொருளாளர், தோழர்.கிருஷ்ண குமார் AIYF மாவட்டத்தலைவர், தோழர். பகவத்குமார் ,தோழர்.அய்யப்பன்,தோழர்.காளிமுத்து AITUC,தோழர்.P.சொக்கலிங்கம்,தோழர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தமிழகத் துணைத் தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.