தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதியன்று தேசிய வாக்காளர் தினம் அனுசரிக்கப்படுகிறது. தேர்தலின்போது இளம் வாக்காளர்கள் உட்பட அனைத்து வாக்காளர்களையும் வாக்களிக்க ஊக்குவிப்பதே இந்த தேசிய வாக்காளர் தினத்தின் முக்கிய நோக்கமாகும். அதன்படி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இதில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு காவல் ஆய்வாளர் ஜெரால்டுவின், நிர்வாக அதிகாரிகள் சிவஞானமூர்த்தி, குமார், ராமசுப்பிரமணிய பெருமாள், அலுவலக கண்காணிப்பாளர்கள் செல்வக்குமார், மயில்குமார், கணேச பெருமாள், மாரியப்பன், காவேரி, சரஸ்வதி, அந்தோணியம்மாள் உட்பட உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-முத்தரசு கோபி ஶ்ரீவைகுண்டம்.