கோவை மாவட்டம் போத்தனூர் 99 வார்டுக்கு உட்பட்ட ஸ்ரீராம் நகர் அருள் முருகன் நகர் பகுதியில் இன்று காலை அந்தப் பகுதி மக்கள் அனைவரும் இணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாடினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் 99 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மு.அஸ்லாம் பாஷா அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் அருகில் முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் முகமது ஜின்னா வட்டக் கழக செயலாளர் முரளிதரன் அவைத்தலைவர் சம்சுதீன்
ஷாஜகான் ரமேஷ் ஃபைசல் மற்றும் பாஜக முன்னாள் மண்டல தலைவர் கோகுல் கலந்து கொண்டனர்.
ஸ்ரீராம் நகர் அருள்முருகன் நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் நிர்வாகிகள். தலைவர் ஸ்ரீதரன், செயலாளர் சாதிக், துணை தலைவர் ஆனந்த பத்மநாபன், பொருளாளர் கோகுல் துணை, பொருளாளர் சீனிவாசன் சுரேஷ், ஷான், கண்ணன், ஸ்ரீராம்,விண்டி, என்கிற வினோத் உஷா, சாந்தி, மாலா, மற்றும் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த சங்கத்தின் செயலாளர் சாதிக் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட மக்கள் பின்பு அங்கு இனிப்புகள் வழங்கப்பட்டு சமைத்த பொங்கலை உண்டு மகிழ்ந்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஈசா, தலைமை நிருபர்.